Breaking News

இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு!

இலங்கை மற்றும் இந்திய மீனவர்களுக்கு இடையிலான பிரச்சினைக்கு தீர்வு காண விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, குருவாயூர் கோவிலில் நேற்று வழிபாடுகளில் ஈடுபட்டார். அதன்பின்னர் அங்கிருந்த ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இலங்கை மீனவர்கள், இந்திய மீனவர்கள் மற்றும் தமிழ் மீனவர்கள் என்று தனித்தனி பிரிவினர் இல்லை. சகல மீனவர்களும் சமமான முறையில் நடத்தப்படுவர் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.