Breaking News

இலங்கையில் சீனக் கப்பல்கள் நங்கூரமிடுவதற்கு அனுமதியில்லை

இலங்கையின் கதவுகள் மூடப்பட்ட காரணத்தினால் சீனா பாகிஸ்தான் பக்கம் திரும்பத் தொடங்கியுள்ளது. இதுவரை காலமும் சீன நீர்மூழ்கிக் கப்பல்கள் இலங்கையின் கடற்பரப்பிலேயே நங்கூரமிடுவது வழமையாகக் காணப்பட்டது.

எனினும் அண்மையில் இந்தியா அழுத்தங்களை பிரயோகித்த காரணத்தினால் இலங்கை, சீன நீர்மூழ்கிக் கப்பல்கள் நங்கூரமிடுவதனை அனுமதிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து சீனா நீர் மூழ்கிக் கப்பல்கள் பாகிஸ்தானில் நங்கூரமிடத் தொடங்கியுள்ளன.

பாகிஸ்தானின் கவுடார் துறைமுகத்தில் சீன கப்பல்கள் நீர் மூழ்கிக் கப்பல்கள் நங்கூரமிடுவதற்கும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ளது. இலங்கையின் புதிய அரசாங்கம் சீனக் கப்பல்கள் நங்கூரமிடுவதற்கு அனுமதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எவ்வாறெனினும், கவுடார் துறைமுகம் சீனாவின் நடவடிக்கைகளுக்கு பொருத்தமாக அமையாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பலுகஸ்தான் தீவிரவாத அச்சுறுத்தல்கள் போதியளவு உட்கட்டுமான வசதிகள் இன்மை போன்ற காரணிகளினால் இந்த திட்டம் வெற்றியளிக்குமா என்பது சந்தேகமே என தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன நீர்மூழ்கிக் கப்பல்கள் இந்த மாதத்தில் உத்தியோகபூர்வமாக கவுடார் துறைமுகத்தை பயன்படுத்திக்கொள்ளும் என தெரிவிக்கப்படுகிறது.