மைத்திரி நடத்தும் இரண்டு போராட்டங்கள்
இலங்கையின் புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கடினமான பணியை ஆற்றிக் கொண்டிருப்பதாகவும், ஒரு புறம் அவர், ஜனநாயகத்தை மீளக் கொண்டு வரவும் மறுபுறத்தில் பிரதான வல்லாதிக்க சக்திகளைத் திருப்திப்படுத்துவதற்கும் போராடி வருவதாகவும் ரைம் சஞ்சிகை தெரிவித்துள்ளது.
இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செவ்வியுடன் புகழ்பெற்ற ரைம் சஞ்சிகையின் வெளியாகியுள்ளது.
இந்த இதழுக்கு இலங்கை ஜனாதிபதி அளித்துள்ள செவ்வியில், நாட்டின் அதிகாரங்கள் மையத்தில் ஒன்றுகுவிக்கப்பட்டுள்ளது பிரதானமான பிரச்சினையாக உள்ளது என்றும், அதிகாரம் பரவலாக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். நாம் யாரையும் பகைத்துக் கொள்ள விரும்பவில்லை என்றும், எல்லா நாடுகளுக்கும் நட்புக்கரத்தை நீட்டுகிறோம் என்றும் அவர் தனது செவ்வி்யில் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, இப்போது கொழும்புத் தெருக்களில் இலங்கை ஜனாதிபதியின் வாகன அணி பயணிக்கும்போது. பொதுமக்கள் அசௌகரியங்களை எதிர்கொள்ளும் நிலை இல்லை என்றும், அவரது வாகன அணியில் மூன்று நான்கு வாகனங்களே இடம்பெற்றுள்ளதாகவும் ரைம் சஞ்சிகை குறிப்பிட்டுள்ளது. இத்தகையதொரு நிலையை முன்னைய ஆட்சியில் நினைத்துக் கூடப் பார்க்க முடியாது என்றும் ரைம் சஞ்சிகை தெரிவித்துள்ளது.