மைத்திரியை விட மஹிந்த சிறந்தவர் – தமிழக மீனவத் தலைவர்கள்
தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கத்தை விடவும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் அசராங்கம் சிறந்தது என தமிழக மீனவத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.மீனவர் பிரச்சினை குறித்து மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கம் ராஜதந்திர ரீதியான அணுகுமுறைகளை பின்பற்றியதாகத் தெரிவித்துள்ளனர்.
எனினும், மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் மீனவர் பிரச்சினை குறித்து உரிய கவனம் செலுத்தத் தவறியுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். அத்து மீறி மீன்பிடியில் ஈடுபட்டால் சுடப்படுவர் என அண்மையில் இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்தார்.
அத்து மீறி மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களை கைது செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கடற்படையினருக்கு உத்தரவிட்டிருந்தார்.எனினும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மீனவர் விவகாரத்தில் கடுமையான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கவில்லை என தெரிவித்துள்ளனர்.
இலங்கை அரச தலைவர்கள் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை குழப்பும் வகையில் செயற்படக் கூடாது என மீனவத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். மீனவர்கள் அத்து மீறுவதனை ராஜபக்ஸ குறையாக சொல்லவில்லை எனவும், மீன்கள் எங்கு கிடைக்கின்றனவோ அங்கு மீனவர் செல்வதாகவே குறிப்பிட்டிருந்தார் எனவும் சுடடிக்காட்டியுள்ளனர்.
தற்போதைய அரசாங்கம் மீனவர் பிரச்சினைகள் குறித்து ராஜதந்திர அணுகுமுறைகளை பின்பற்றத் தவறியுள்ளதாக தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.