தமிழர் தரப்பு ஆழமான அரசியல் செயற்றிட்டத்தில் இணையவேண்டும் – கஜேந்திரகுமார் (காணொளி )
தமிழ்த்தேசியத்தை அடித்தளமாக கொண்ட அரசியல்தளம் ஒன்றை உருவாக்கும் நோக்குடனே ஆரம்பிக்கப்பட்டது என தமிழ்த்தேசிய மக்கள் முன்னனியின் தலைவர் கயேந்திரகுமார் தெரிவித்தார்.
அவுஸ்திரேலியாவின் மெல்பேணில் நடைபெற்ற தமிழீழ நாட்டுப்பற்றாளர் நாள் நிகழ்வில் தனது உரையை பதிவுசெய்யும்போதே மேற்படி கருத்தை அவர் வெளியிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
1983 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட இனப்படுகொலையை தொடர்ந்து பேச்சுவார்த்தைக்கு சென்ற தமிழர் தரப்புகள் தமிழர் தேசம் அங்கீகரிக்கப்படவேண்டும் என்ற அடிப்படையிலேயே பேச்சுவார்த்தைகளுக்கு சென்றார்கள்.
ஆனால் அதற்குப்பின்னர் மோசமான இனப்படுகொலையை 2009 இல் சந்தித்தபின்னர் அதனிலும் மிகவும் குறைவான தீர்வாக 13வது திருத்தத்தை ஏற்றுக்கொண்டு இந்தியாவின் நலன்களோடு இணைந்து செயற்படுவது மிகவும் விமர்சனத்திற்குரியது எனவும் தமிழர் தரப்பு ஆழமான அரசியல் செயற்றிட்டத்தில் இணையவேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.
உரையின் காணொளி வடிவம்: