Breaking News

பஷில்,ரத்ன தேரர் ஆகியோரின் இரகசிய சந்திப்பு எதற்காக!

ஊழல் குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் விளக்க மறியலில் வைக்கப்பட்டிருக்கும் நிலையில், தற்போது தேசிய வைத்தியசாலை மேர்சன் வோர்ட்ஸ் சொகுசு அறையில் அனுமதிக்கப் பட்டிருக்கும் பஷில் ராஜபக்ஷ மற்றும் அத்துரலியே ரத்ன தேரர் ஆகியோருக்கு இடையில் சந்திப் பொன்று இடம் பெற்றுள்ளது.


கடந்த 27ம் திகதி, 5 மணித்தியாலங்களுக்கு மேல் சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. வெலிக்கடை சிறையில் இருந்து சுகயீனம் என்று அறிவித்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள பஷில் சொகுசாக இருந்து கொண்டு தன்னை சந்திக்க வரும் அரசியல்வாதிகளிடம் மணித்தியாலக் கணக்கில் தனது அரசியல் எதிர்காலம் மற்றும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உரையாடி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிரங்கமாக ராஜபக்ஷக்களை விமர்சிக்கும் ஜாதிக ஹெல உறுமய மறுமுனையில் ராஜபக்ஷக்களுடன் உறவுகளை பேணி வருகின்றமை அவர்களது இரட்டை வேட நிலையை எடுத்துக் காட்டுவதாகவும் விமர்சிக்கப்படுகிறது.