Breaking News

இந்தியாவை எச்சரிக்கிறது சீனா!

தனது திட்டங்களில் இந்தியா மூக்கை நுழைத்தால் கடும்விளைவுகளை எதிர்நோக்க வேண்டி வரும் என்று சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.

சீனாவின்"பட்டுப் பாதை திட்டத்துக்கு தடை ஏற்படுத்தும் விதத்தில் இந்தியா நடந்தால் அது மிகப் பெரிய பிரச்சினையை உருவாக்கும்" எனத்தெரிவித்துள்ள சீனா தன்னுடைய இராஜதந்திரத்தில் எவரும் குறுக்கே வருவதை விரும்பவில்லை என்றும் கூறியுள்ளது.

நீண்ட காலமாக சீனா இந்து சமுத்திரத்தில் தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்தும் விதத்தில் ஐரோப்பிய நாடுகளுடன் முன்னைய காலத்தில் இருந்த பட்டுப் பாதை திட்டத்தை இராணுவ வலிமையுடன் நடைமுறைப்படுத்தி வருகிறது. சீனாவின் இந்தத் திட்டத்திற்கு எதிராக இந்தியா 'பருவப் பாதை' என்ற தனது பழங்காலத் திட்டத்தைக் கையில் எடுத்தது.

இதையடுத்தே சீனாவின் வெளிவிவகார அதிகாரி ஹு ஸிசேங் "சீனாவின் கடல் வழி மற்றும் சாலை வழி பட்டுப்பாதை திட்டத்திற்கு இந்தியா ஒரு பாலமாக இருக்கிறது. இந்த திட்டத்தை இந்தியாவுடன் இணைந்து செயல்படுத்த சீனா தீவிரமாக உள்ளது.

இந்த திட்டத்திற்கு இந்தியா எவ்வித இடையூறும் செய்யாமல் இருந்தால் நல்லது. ஏதாவது பிரச்சினை செய்தால் அது மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்தும். இருந்தாலும் இந்தியா அவ்வாறு செய்யாது என நான் நம்புகிறேன். சீனாவின் பொருளாதார வளர்ச்சி தற்போது 7.4 சதவீதமாக குறைந்துள்ள நிலையில், அதை மீட்டெடுக்க பட்டுப்பாதை திட்டம் மிகவும் உதவிகரமாக இருக்கும்." என அவர் தெரிவித்துள்ளார்.

நடப்பு அரசியலில் சீனாவின் இராஜதந்திரத்தை குழப்புதல்,தன்னுடைய அண்டை நாடுகளில் சீனாவின் ஆதிக்கத்தை குறைத்தல் என்னும் புதிய திட்டத்தினை இந்திய மோடி அரசாங்கம் கையெழுடுத்திருக்கின்றது.குறிப்பாக சீனாவிற்கு தலையிடியாய் இருக்கும் திபெத்தின் விவகாரத்தில் இந்தியா மூக்கை நுழைப்பதோடு,திபெத்தின் ஆன்மீகத்தலைவரும் திபெத்தின் விடுதலைக்காக போராடி வரும் தலாய்லாமாவை இந்தியாவிற்கு அழைத்து பேசுவதும் அவருக்கு ஆதாரவு தருவதாக கூறுவதும் சீனாவை கடுப்பில் ஆழ்த்தியிருந்த வேளையில்,

சீனாவின் இலங்கை ஆதிக்கத்தை கட்டுப்படுத்த மகிந்த ராஜபக்ச ஆட்சியை முடிவிற்கு கொண்டு வர இந்திய அரசாங்கம் கடும்பிரயத்தனப்பட்டது. இந்நிலையில் ஆட்சிக்கு வந்த புதிய அரசாங்கம் சீனாவை விட இந்தியாவிற்கு அதிக முன்னுரிமை கொடுத்து இந்தியாவின் நலனை அடிப்படையாகக் கொண்டு செயல்ப்பட தொடங்கியிருக்கின்றது. இந்த நிலையில் பட்டுப்பாதை விவாகரத்திலும் இந்தியா ஏதுதேனும் இடையூறு விளைவித்தால் அது தன் நாட்டின் கௌரவத்திற்கும் இராஜதந்திரத்திற்கும் விடப்படும் சவால் என்று சீனா கருதுகின்றது. இதன் எதிரொலியே இந்தியாவின் மீதான இந்த எச்சரிக்கை.