Breaking News

வடமாகாணத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க அரசு முயல்கிறது - விக்கி குற்றச்சாட்டு

மத்­திய அர­சாங்­க­மா­னது வட­மா­கா­ணத்தை தனது கட்­டுப்­பாட்­டுக்குள் வைத்­தி­ருக்க முயற்சி செய்­கின்­றது என வட மாகா­ணத்­திற்கு விஜயம் செய்­துள்ள ஐக்­கிய நாடுகள் சபையின் உதவி செய­லா­ளரும் ,ஐக்­கிய நாடு­களின் அபி­வி­ருத்தி திட்­டத்தின் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்­தி­யத்தின் நிறை­வேற்­றுப்­ப­ணிப்­பா­ள­ரு­மான ஹோலியாங் சு விடம் வட­மா­கண முதல்வர் சி.வி.விக்­கி­னேஸ்­வரன் குற்றம்சாட்டியுள்ளார்.

வடக்கில் இரா­ணு­வத்தை குறைப்போம் என்று கூறி­ய­வர்கள் தற்­போது இரா­ணுவம் குறைக்­கப்­ப­ட­மாட்­டாது கூறு­வ­துடன் காணமல் போன­வர்கள் தொடர்­பாக பிரச்­சி­னைக்கு இது­வ­ரையில் எந்தப் பதிலும் கிடைக்­க­வில்லை எனவும் கூறியுள்ளார்.

இலங்­கைக்கு விஜயம் செய்­துள்ள ஐக்­கிய நாடுகள் சபையின் உதவி செய­லா­ளரும் ,ஐக்­கிய நாடு­களின் அபி­வி­ருத்தி திட்­டத்தின் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்­தி­யத்தின் நிறை­வேற்­றுப்­ப­ணிப்­பா­ள­ரு­மான ஹோலியாங் சு வட­மா­கா­ணத்­திற்கு நேற்றை தினம் விஜயம் செய்­தி­ருந்தார். இதன்­போது முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வ­ரனை சந்­தித்து யுத்தின் பின்­ன­ரான வடக்கு நிலை­மைகள் வட­மா­கா­ண­ச­பையின் செயற்­பா­டுகள் தொடர்­பாக விரி­வாக கலந்­து­ரை­யா­டினார். இந்தக்கலந்துரையாடலின் பின்னர் ஊடங்­க­ளுக்கு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே முத­ல­மைச்சர் இவற்றை தெரி­வித்தார்.

“ஐக்­கிய நாடு­களின் அபி­வி­ருத்தி செயற்­பா­டுகள் தொடர்­பாக ஆரா­ய­வே­ஹோ­லியாங் சு யாழ்ப்­பா­ணத்­திற்கு வருகை தந்­ததன் பிர­த­தான நோக்­க­மா­க­வுள்­ளது. கடந்த வரு­டமும் இவர் இங்கு வந்­துள்ளார். மேலும் கடந்த ஆட்­சியின் போது தாம் இங்கு பணி­பு­ரிய தடைகள் காணப்­பட்­டன. தற்­போது தடைகள் யாவும் தளர்­வ­டைந்­துள்­ள­துடன் சுதந்­தி­ர­மாக பணி­பு­ரி­யக்­கூ­டிய நிலமை ஏற்­பட்­டுள்­ளதை அவ­ரி­டத்தில் குறிப்­பிட்டேன்.

மத்­திய அர­சாங்­க­மா­னது வட­மா­கா­ணத்தை தனது கட்­டுப்­பாட்­டுக்குள் வைத்­தி­ருக்க நினைக்­கின்­றது. முன்னர் வடக்கில் இரா­ணு­வத்தை குறைப்போம் என்று கூறி­ய­வர்கள் தற்­போது இரா­ணுவம் குறைக்­கப்­ப­ட­மாட்­டாது என தெரி­விக்­கின்­றனர் என்­பதை அவ­ரு­டைய கவ­னத்­திற்கு கொண்டு வந்தேன். அது­மட்­டு­மல்­லாது முக்­கி­ய­மாக காணா­மல்­போனோர் தொடர்­பி­லான பிரச்­சி­னைக்கு தீர்வோ பதிலோ இன்­னமும் கிடைக்­க­வில்லை என்­ப­தையும் அவ­ரி­டத்தில் சுட்­டிக்­காட்­டினேன்.

வட­மா­கா­ணத்­திற்கு பணிபுரிவதற்கு நாம் ஆவல் கொண்டுள்ளோம். ஆனால் தற்போது நிதி கிடைப்பது குறைவாக இருக்கின்றது. இருப்பினும் எமக்கு கிடைக்கும் நிதியை என்றாலும் வடமாகாணத்திற்காக முழுமையாக செலவளிக்க தாம் தயாராக இருப்பதான என்னிடத்தில் ஐ.நா உதவிச்செயலாளர் உறுதியளித்தார்” என்றார்.