Breaking News

பசிலை விடுதலை செய்யகோரி அதிகாரிகளுக்கு கொலை அச்சுறுத்தல்

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவை விடுதலை செய்யுமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.


சிறைச்சாலை அதிகாரிக்கு கடந்த 26 ஆம் திகதி தொலைபேசி ஊடாக இவ்வாறு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து சிறைச்சாலை ஆணையாளர் பொரளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரகதி லக்மினி அபேநாயக்கவிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

தற்போது கைது செய்யப்பட்டு கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெசில் ராஜபக்சவை உடனடியாக விடுதலை செய்யுமாறு கடுமையான வார்த்தைகளினால் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த தொலைபேசி அழைப்புக்கள் பற்றிய விபரங்களை திரட்டி அடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பொரளை பொலிஸ் நிலையம் அதிகாரி தெரிவித்துள்ளார்.