Breaking News

செலவதிகரிப்பு குற்றச்சாட்டை நிராகரித்தது சீனா

வடக்கு தொடருந்து பாதையின் அமைப்பதற்கான செலவை காட்டிலும் தெற்கு தொடருந்து பாதையை நிர்மாணிப்பதற்கு அதிக செலவினத்தை காண்பித்ததாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை, இலங்கை - சீன வர்த்தக சபை நிராகரித்துள்ளது. 

சின்ஹுவா இணையத்தளம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. வடக்கில் ஏற்கனவே காணப்பட்ட பாதை புனரமைக்கப்பட்டது.  ஆனால் தெற்கில் பல பாலங்கள், சுரங்கங்கள் என்பவை அமைக்கப்பட்டே தொடருந்து பாதை நிர்மாணிக்கப்பட்டது. இதனால் தெற்கு தொடருந்து பாதை நிர்மாணப் பணிகளுக்கு அதிக செலவு ஏற்பட்டதாக அந்த சபை சுட்டிக்காட்டியுள்ளது.