மீண்டும் தமிழகம் திரும்பிய ஈழ அகதிகள்
தமிழத்தில் இருந்து நாடு திரும்பிய ஈழ அகதிகள் சிலர் மீண்டும் தமிழகத்துக்கு அகதிகளாக சென்றுள்ளனர்.
திருகோணமலையைச் சேர்ந்த அவர்கள் கடந்த 2010ம் ஆண்டு சட்ட ரீதியாக சுய விருப்பத்துடன் தமிழகத்தில் இருந்து நாடு திரும்பினர். இந்த நிலையில் அவர்கள் மீண்டும் படகு ஒன்றின் மூலம் தனுஸ்கோடியைச் சென்றடைந்ததாக தமிழக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் வசிப்பதற்கு சாதகமான சூழ்நிலை இல்லாத காரணத்தால் தாங்கள் மீண்டும் தமிழகத்துக்கே திரும்பியதாக அவர் கூறியுள்ளனர். குறித்த ஐந்து பேரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். படகில் பயணிப்பதற்காக அவர்கள் தலா 25 ஆயிரம் ரூபாய் கட்டணமாக வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.