வலி.வடக்கில் விடுவிக்கப்பட்ட காணிகளில் இராணுவத்துக்கு பயிற்சி - அச்சத்தில் மக்கள்
யாழ். வலிகாமம் வடக்கு பகுதியில் பாதுகாப்பு வலயக் காணிகளாக இருந்து அண்மையில் விடுவிக்கப்பட்ட காணிகளில் இராணுவத்தினரின் பயிற்சிகள் இடம்பெற்று வருவதனால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.
குறித்த பகுதியில் 3 இராணுவ முகாம்கள் இருப்பதாகவும், 3 வேளைகளிலும் இராணுவத்தினர் பயிற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கும் பிரதேச மக்கள், இது அச்ச நிலைமையை தோற்றுவித்திருப்பதாகவும் குறிப்பிடுகின்றனர்.
குறித்த பிரதேசமானது மின் இணைப்புகள் அற்றும், பற்றைகளாகவும் காணப்படுகின்றமை இதற்கு ஏதுவாக அமைகிறது என்று வலிகாமம் வடக்கு பிரதேச மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இது குறித்து அச்சத்துடன் கருத்து வெளியிடும் பிரதேச மக்கள்,
இராணுவம் தங்களது கிழக்கு – மேற்கான வீதியில் வடபகுதியில் இராணுவத்தினர் முகாமை பலப்படுத்திக் கொண்டுள்ளதுடன் தங்களது பயிற்சிகளையும் முன்னெடுத்து வருகின்றனர். இரவு வேளைகளில் காட்டுப் பிரதேசமான இப்பகுதியில் மக்கள் எவ்வாறு நிம்மதியாக வாழ முடியும் என்று கேள்வி எழுப்புகின்றனர். மீள்குடியேறும் எங்களது பயத்தை ஏற்படுத்துகின்றது என்றும் மக்கள் குறிப்பிடுகின்றனர்.