சுதந்திர கட்சியின் பிளவை தடுக்காவிட்டால் தமிழ் மக்களால் தோற்கடிக்கப்படுவோம்!
மகிந்தவுக்கு ஆதரவான தரப்பினரும், மைத்திரிக்கு ஆதரவான தரப்பினருமாக இரண்டு தண்டவாலங்களை போல செயற்படுகின்றன. இவ்வாறு இரண்டு தண்டவாலங்களை செயற்பட்டால் காங்கேசன்துறையிலோ, திருகோணமலையிலோ முடிவை சந்திக்க வேண்டி வரும், சிறிலங்கா சுதந்திர கட்சியில் ஏற்பட்டுள்ள பிளவை தடுக்காவிட்டால், தமிழ் மக்களால் மீண்டும் தோற்கடிக்கப்படும் நிலை ஏற்படும் என்று முன்னாள் அமைச்சர் ஜோன் செனேவிரத்ன தெரிவித்துள்ளார்.
தற்போது சிறிலங்கா சுதந்திர கட்சியில் பிளவுகள் ஏற்பட்டுள்ளன. மகிந்தவுக்கு ஆதரவான தரப்பினரும், மைத்திரிக்கு ஆதரவான தரப்பினருமாக இரண்டு தண்டவாலங்களை போல செயற்படுகின்றன. இவ்வாறு இரண்டு தண்டவாலங்களை செயற்பட்டால் காங்கேசன் துறையிலோ, திருகோணமலையிலோ முடிவை சந்திக்க வேண்டி வரும். எனவே இந்த பிளவினைஏற்படுத்த வேண்டாம் என்று தாம் மகிந்தராஜபக்ஷவை கோரியுள்ளதாகவும், விரைவில் சந்திரிக்காவையும் இது குறித்து சந்திக்கவிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.