Breaking News

மகிந்தவின் சூப்பை விட மைத்திரியின் கஞ்சி சிறந்தது - பொன்சேகா

மகிந்த ராஜபக்சவின் பழுதடைந்த சூப் பானையை விட மைத்திரி – ரணிலின் கஞ்சிப் பானை சிறந்தது என ஜனநாயகக் கட்சியின் தலைவரான பீல்ட் மார்ஷல் சத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.


தனியார் தொலைக்காட்சி ஒன்றின் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்துள்ள பொன்சேகா, கஞ்சி என்பது மருத்துவ குணாதிசயங்களை கொண்ட பானம் என்றும் கூறியுள்ளார்.

மகிந்தவின் பழுதான சூப்பை பருகுவதற்கு பதிலாக, கஞ்சி மிகவும் சிறந்தது. போர் நடைபெற்ற காலத்தில் புலிகளின் வங்கியில் இருந்து மீட்கப்பட்ட 220 கிலோ கிராம் தங்கம் குறித்து இராணுவம் ஆவணங்களில் பதிவு செய்து அதனை அரசாங்கத்திடம் வழங்கியது.

எனினும் தற்போது நாட்டில் இல்லாத முன்னாள் அமைச்சர் ஒருவர் அரசாங்கத்திடம் 110 கிலோ தங்கம் இருப்பதாக கூறியுள்ளார். இது குறித்து அரசாங்கம் விசாரணை நடத்த வேண்டும். அது தொடர்பில் முறைப்பாடு செய்ய வேண்டுமாயின் என்னால், அதனை செய்ய முடியும்.

எவ்வாறாயினும் கடந்த அரசாங்கத்தின் ஊழல், மோசடிகள், குற்றச் செயல்கள் தொடர்பாக நடத்தப்படும் விசாரணைகள் மகிழ்ச்சியை ஏற்படுத்தவில்லை. அவற்றை மேலும் துரிதப்படுத்த வேண்டும். திருடர்கள் தொடர்பாக அரசாங்கம் துரிதமாக செயற்படாமல் இருப்பதே எனக்கு கேள்வியாக உள்ளது. சில அதிகாரிகளின் ஊதாசீன போக்கு இதற்கு காரணம் எனவும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.