Breaking News

மிதக்கும் ஆயுதக் கப்பல் தொடர்பிலான அறிக்கை இந்த வாரம் சமர்ப்பிக்கப்பட உள்ளது



மிதக்கும் ஆயுதக் கப்பல் களஞ்சியம் தொடர்பிலான அறிக்கை இந்த வாரத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் காலி கடற்பரப்பில் இந்த மிதக்கும் ஆயுதக் கப்பல் களஞ்சியம் கண்டு பிடிக்கப்பட்டது.

குறித்த ஆயுதக் களஞ்சியம் தொடர்பில் குற்றப் புலனாய்வு பிரிவினர் அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்க உள்ளனர். அவன்ட் கார்ட் நிறுவனத்தினால் இந்த ஆயுதக் களஞ்சியம் பராமரிக்கப்பட்டு வந்ததாதகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த ஆயுதக் களஞ்சியம் தொடர்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ச, முன்னாள் கடற்படைத் தளபதி உள்ளிட்ட பல்வேறு நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதனை தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகத் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.