பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கமுடியாது – நீதி அமைச்சர்
19வது திருத்தச்சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றும் வரையில், இலங்கை அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பான எந்தவொரு கலந்துரையாடலையும் மேற்கொள்ளாது என்று நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
‘இப்போது முதன்மையாக உள்ள விடயம் 19வது திருத்தச்சட்டத்தை நிறைவேற்றுவது மட்டும் தான். அதனை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதிலேயே நாம் கவனம் செலுத்தி வருகிறோம்.
ஏனைய விவகாரங்கள் எல்லாமே, அதற்குப் பின்னர் தான். சில மனித உரிமை அமைப்புகள் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க வேண்டும் என்று கோரி வருகின்றன. பயங்கரவாத தடைச்சட்டத்தின் சில விதிகள், மனித உரிமைகள் பற்றிய தரநியமங்களுக்கு ஏற்றவாறு இல்லை என்றும், அடிப்படை உரிமை மீறல்களை ஊக்குவிப்பதாகவும், மனித உரிமை அமைப்புகள் சுட்டிக்காட்டுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.