சுதந்திரக் கட்சியின் அதிகாரத்தை கைப்பற்றும் முயற்சியில் மஹிந்த தீவிர முயற்சி
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அதிகாரத்தைக் கைப்பற்றும் முயற்சியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தமக்கு ஆதரவான பாராளுமன்ற உறுப்பினர்களை அதிகளவில் வெற்றிப் பெறச் செய்யும் வியூகம் ஒன்றை மஹிந்த வகுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. கட்சிக்கு உள்ளே போட்டியிடக் கூடியவர்களை போட்டியிடச் செய்து வெற்றியீட்ட செய்யவும், கட்சியில் வேட்பு மனு வழங்கப்படாதவர்கள் வேறும் மாற்று வழிகளில் போட்டியிடச் செய்யும் திட்டமொன்றையும் மஹிந்த முன்னெடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வேட்பு மனு வழங்கப்படாதவர்களுக்கு நேரடி உதவிகளை வழங்காது நிதி உதவிகளை வழங்கி தேர்தலில் வெற்றியீட்டச் செய்ய முயற்சித்து வருவதாகக் குறிப்பிடப்படுகிறது. எவ்வாறெனினும், எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிடும் உத்தேசம் முன்னாள் ஜனாதிபதிக்கு கிடையாது என சிரேஸ்ட கட்சி உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தனக்கு ஆதரவானவர்களை பலப்படுத்தி அதன் மூலம் கட்சியின் அதிகாரத்தைக் கைப்பற்றுவதே முன்னாள் ஜனாதிபதியின் நோக்கமாக அமைந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.