Breaking News

தமிழ் தேசிய கூட்டமைப்பின் விசேட சந்திப்பு

தமிழ்தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கு இடையிலான விசேடகூட்டம் ஒன்று எதிர்வரும் 17ம் திகதி நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கட்சியின் தகவல்கள் இதனைத் தெரிவிக்கின்றன. இதன் போது கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஐந்து கட்சிகளும் பங்குபற்றவுள்ளன. கூட்டணிகட்சிகளுக்கு இடையில் பல்வேறு விடயங்களில் புரிந்துணர்வை ஏற்படுத்திக்கொள்வது தொடர்பில் இந்த கூட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது.

மேலும் கூட்டமைப்பை அரசியல் கட்சியாக பதிவு செய்வது தொடர்பிலும் இதன் போது பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.