Breaking News

கச்சதீவு மீண்டும் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படாது - சென்னையில் கிரியெல்ல

கச்சதீவு மீண்டும் இந்தியாவுக்கு வழங்கப்படமாட்டாது என்று இலங்கையின் பெருந்தோட்டத்துறை அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்குத் தனிப்பட்ட பயணமாகச் சென்றுள்ள அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய போதே, கச்சதீவு இந்தியாவிடம் திருப்பி ஒப்படைக்கப்படமாட்டாது என்று தெரிவித்துள்ளார்.

‘கச்சதீவை ஒரு உடன்பாட்டின் மூலம், இலங்கைக்கு இந்தியா வழங்கியது. அதனைத் திருப்பிக் கொடுப்பதற்கு வாய்ப்பில்லை. கச்சதீவின் மீதான இலங்கையின் உரிமையை இந்தியா 1974ஆம் ஆண்டு உடன்பாட்டின் மூலம் அங்கீகரித்துள்ளது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பயணத்தின் பயணத்தின் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் வலுப்பெற்றுள்ளன. இரண்டு நாடுகளும் இயல்பான உறவுகளை பேணிக் கொள்ள வேண்டும்’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.