மகள் சுருதிஹாசன் வளர்ச்சியை கண்டு பெருமைப்படும் கமலஹாசன்!
உத்தம வில்லன் படம் நினைத்த மாதிரி சிறப்பாக வந்துள்ளது. இதில் டைரக்டர் பாலசந்தர் நடித்து இருக்கிறார். அவரிடம் நான் வேலை பார்த்து இருக்கிறேன். அவர் படங்களில் உதவியாளராக பணியாற்றி இருக்கிறேன். கதை விவாதங்களில் இருந்து இருக்கிறேன், டான்ஸ் மாஸ்டராகவும் பணி செய்துள்ளேன்.
நமது படங்களை உலக அளவில் கொண்டுபோக வேண்டும் என்பது தான் முக்கியம் நமது வாழ்க்கை மற்றவர்களுக்கு உதாரணமாக இருக்க வேண்டும். எம்.ஜி.ஆர். சிவாஜியின் கலவையாக அமிதாப் பச்சன் இருக்கிறார்.
என்னை பொறுத்த வரை ரசிகர்கள் தான் முக்கியமானவர். பணம், புகழ் வரும் போகும். ஆனால் ரசிகர்களை நிரந்தரமாக தக்க வைத்துக் கொள்வது தான் சிறப்பானது. என் மகள்கள் சுருதிஹாசன், அக்ஷராவை நினைத்து பெருமைப்படுகிறேன். அக்ஷராவை அவ்வை சண்முகி படத்தில் நடிக்க வைக்க முயற்சித்தேன்.
ஆனால் அக்ஷராவுக்கு விருப்பம் இல்லை கெஞ்சினேன். மூன்று நாள் தான் நடிப்பேன் என்று நிபந்தனை விதித்தார். இப்போது அக்ஷராவை ஷமிதாப் படத்தில் டைரக்டர் பால்கி நடிக்க வைத்து விட்டார். இதற்காக அவருக்கு நன்றி தெரிவிக்கிறேன். சுருதி வளர்ந்த பிறகும் லட்சியத்தை அடைய வில்லை என்கிறார். இப்படி பசியோடு இருப்பது தான் நல்லது. அது இன்னும் வளர்ச்சியை ஏற்படுத்தும். திரைப்பட விழாக்களில் நான் பங்கேற்பது இல்லை. அது அரசியல் ஆகி விட்டது.