Breaking News

சுரேஸ் - யாழ் அரச அதிபர் சந்திப்பு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரனுக்கும் யாழ் அரசாங்க அதிபர் வேதநாயகனுக்கும் இடையில் இன்று சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.


இச்சந்திப்பில் வலி வடக்கில் மீள்குடியேறிய மக்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் மீள் குடியேற்றத்துக்கு தேவையான குடிதண்ணீர், போக்குவரத்து, மலசலகூட வசதிகள் போன்ற அடிப்படை வசதிகளை விரைவாக செய்து கொடுக்குமாறு அவர் கோரிகை விடுத்துள்ளார்.

இதேவேளை சங்கரத்தை பகுதியில் மக்களுக்கு விநியோகிப்பதற்காக அப் பகுதியில் தற்காலிக தண்ணீர்த் தாங்கிகளை வைக்குமாறும் கேட்டுக் கொண்டார். இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் தொடந்தும் முள் வேலிகளும் முகாம்களும் இருக்கின்றன. 

இதனால் அப் பகுதியில் மக்கள் மீள்குடியேற முடியாத நிலை ஏற்படும் என சுரேஸ் பிரேமச்சந்திரன் அரசாங்க அதிபருக்கு தெரிவித்தார். இந்த விடயங்கள் தொடர்பில் விரைவாக நடவடிக்கை எடுப்பதாகவும் அரச அதிபர் தெரிவித்தார் என சுரேஸ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார்.