எதிர்கட்சித் தலைவர் குறித்து சபாநாயகருடன் பேச்சு - சுசில்
நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவர் பதவி சம்பந்தமாக தாம் மீணட்டும் சபாநாயகருடன் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொது செயலாளர் சுசில் பிரேமஜெயந்த தெரிவித்துள்ளார்.
எதிர்கட்சித் தலைவர் பதவியை தங்களுக்கு வழங்குமாறு இலங்கை தமிழரசு கட்சி சபாநாயகருக்கு கடிதம் ஒன்றை வழங்கியுள்ள நிலையிலேயே இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாக அவர் கூறியுள்ளார்.