கட்சியின் மத்திய செயற்குழுவில் இருந்து ரோஹித அபேயகுணவர்தன நீக்கம்
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழுவில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேயகுணவர்தன நீக்கப்பட்டுள்ளதாக அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஜனாதிபதி கையொப்பமிட்ட கடிதம் ஒன்றின் மூலம் இதனை தனக்கு தெரியப்படுத்தியுள்ளதாக அவர் கூறியுள்ளார். ஏற்கனவே ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழுவில் இருந்து பந்துல குணவர்த்தன, சாலிந்த திஸாநாயக்க, ரி.பீ.ஏக்கநாயக்க, எஸ்.எம்.சந்திரசேன, ஆகியோர் நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.