Breaking News

சுதந்திரக்கட்சியின் பிரதமர் வேட்பாளராக களமிறங்கும் சந்திரிகா


எதிர்­வரும் பொதுத்­தேர்­தலில் ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் பிர­தமர் வேட்­பா­ள­ராக முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா குமா­ர­துங்க களமிறங்கவுள்­ள­தாக அந்­தக்­கட்சி வட்­டா­ரங்­க­ளி­லி­ருந்து நம்பகரமாக தெரிய வரு­கி­றது. முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்­சவை சுதந்­திரக்கட்­சி­யி­லி­ருந்து ஓரம் கட்டும் வித­மா­கவே கட்­சிக்குள் இத்­தீர்­மானம் எடுக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அறிய வரு­கி­றது.

சுதந்திரக்கட்சியில் கடந்த சில தினங்களின் முன் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு சந்திரிகாவும் பச்சைக்கொடி காட்டியுள்ளார். சுதந்திரக்கட்சியின் முஸ்லீம் பிரதிநிதியொருவர் எமது செய்திச்சேவைக்கு இதனை உறுதி செய்துள்ளார்.

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்­தவை சுதந்­தி­ரக்­கட்­சியின் ஊடாக ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் பிர­தமர் வேட்­பா­ள­ராக கள­மி­றக்­கு­வ­தற்கு வாசு, தினேஷ், விமல் மற்றும் கம்­மன்­பில, பிர­சன்ன ரண­துங்க உள்ளிட்ட குழு­வினர் கடுமையான முயற்­சி­களை மேற்­கொண்டு வருகின்றனர். மஹிந்­த­விற்கு ஆத­ர­வாக பொதுக்கூட்­டங்­க­ளையும் நடத்­தி­ வருகின்றனர். 

இந்தக் கூட்டங்களிற்கு மஹிந்­த செல்லாதபோதும், அவரது நடவடிக்கைகள் அரசியலில் மீள்பிரவேசம் செய்யும் ஆர்வத்தை வெளிப்படுத்துபனவையாகவே உள்ளன. தேர்­தல் தோல்­விக்கு பின்னர் ஒதுங்­கி­யி­ருக்­காது விகா­ரை­களில் நடை­பெறும் விழாக்­க­ளிலும் மற்றும் மத அனுஷ்­டா­னங்­க­ளிலும் கலந்­து­கொள்வ­தோடு அவ்­வப்­போது ஊட­கங்­க­ளுக்கு கருத்­துக்­க­ளையும் வெளி­யிட்டு வருகிறார்.

கொழும்பு நாரன்­ஹேன்­பிட்டி அப­ய­ராம விகா­ரையில் மஹிந்­த­வுக்கு என தனி­யான அலு­வ­ல­கமும் வழங்­கப்­பட்­டுள்­ளது. மறு­புறம் ஏ.எஸ்.பி. லிய­ன­கே­வுக்கு சொந்­த­மான பீகொக் மாளி­கை­யையும் மஹிந்த தங்­கு­வ­தற்கு வழங்­கப்­பட்­டுள்­ள­தோடு அங்கு தற்­போது யாகங்­களும் நடை­பெற்­றுள்­ளன.

இவ்­வாறு மீள அர­சியல் பிர­வே­ச­வத்­திற்­கான அனைத்து முயற்­சி­க­ளையும் மேற்­கொண்டு வரும் சூழ் நிலை­யி­லேயே, நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­ப­தியின் அதி­கா­ரங்­களை குறைக்கும் 19 வது திருத்­தத்தை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் அரசு முன்­வைத்­தது.

எனினும், 19வது திருத்தத்திற்கு ஆதரவு வழங்குவதில் அரசின் பங்­காளிக்கட்­சி­யான ஹெல உறு­மய மற்றும் சுதந்­திர கட்­சியின் சிலரும், ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் சிலரும் தயக்கம் காட்டிவருவதுடன், சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றனர். தமிழ் தேசிய கூட்­ட­மைப்பும்,ஜே.வி.பி.யும் இதற்கு ஆத­ரவை வெளி­யிட்­டன. இந்த குழப்பமான நிலையையடுத்து, ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவு 19 க்கு ஆத­ரவு வழங்காவிட்டால் பாரா­ளு­மன்­றத்தை கலைப்­ப­தாக அறி­வித்தார்.

இதன் பின்னர் கல­வ­ர­ம­டைந்த சுதந்­திரகட்­சி­யினர் ஜனா­தி­ப­தியை சந்­தித்து 19 க்கு ஆத­ரவு தெரி­விக்­கவும் அத்­தோடு 20 ஆவது திருத்­த­மாக தேர்தல் முறை­மையில் மாற்­றத்­தையும் கொண்டு வந்து நிறை­வேற்ற இணக்கம் தெரி­வித்­தனர். ஜாதிக ஹெல உறு­ம­யவின் பொது செய­லா­ளரும், அமைச்­ச­ரு­மான சம்­பிக்­கவும் திருத்­தங்­க­ளு­ட­னான ஆத­ர­வுக்கு இணக்கம் தெரி­வித்­துள்ளார்.

இந்த சர்ச்சையை மகிந்த அணியும் தமக்கு சாதகமாக பயன்படுத்தி சற்று பலமான நிலையை எட்டியுள்ளதாக தெரிகிறது. அந்த அணி சுதந்திரக்கட்சிக்குள் தொடர்ந்து குழப்பத்தை ஏற்படுத்த அனுமதிக்காமல் ஒரேயடியாக கட்சிக்குள்ளிருந்து மஹிந்­தவை சுதந்­திர கட்­சி­யி­லி­ருந்து ஓரம் கட்டுவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது. சுதந்திரக்கட்சியின் பிரதமர் வேட்பாளராக நிமல் அல்லது தற்போது அரசியலில் உள்ள வேறு முக்கியஸ்தர் களமிறங்கினால் அது மகிந்தவிற்கு சாதகமான நிலையை ஏற்படுத்தும் என்பதால், சந்திரிகாவே களமிறங்க வேண்டுமென மைத்திரிபால நேரடியாகவே கோரிக்கை விடுத்துள்ளார். இதனை ஏற்றுக் கொண்டுள்ள சந்திரிகா, தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ளதாக தெரிகிறது. 

தேர்தலில் போட்டியிடுவதென அவர் தீர்மானித்த பின்னரே, அண்மைநாட்களாக கட்சியின் பிரதேசகூட்டங்கள் அனைத்திலும் கலந்து கொண்டு வருவதாக கூறப்படுகிறது.