சுன்னாகம் நிலத்தடி நீரில் ஒயில் கசிவு! ராடர் மூலம் ஆய்வு
சுன்னாகம் நிலத்தடி நீரில் கழிவு ஒயில் கலந்துள்ளமையினைக் கண்டறியும் வடக்கு மாகாண சபையினால் நியமிக்கப்பட்ட நிபுணர்குழுவின் மேற்பார்வையில் ராடர் கருவியைப் பயன்படுத்தி ஆய்வு செய்யும் நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு கொண்டுவரப்பட்ட குறித்த ராடர் கருவி மூலம் சுன்னாகம் மின்சார நிலையம் அமைந்துள்ள பகுதியில் உள்ள நிலத்தடி நீரில் கழிவு ஒயில் இருக்கும் பகுதி , மற்றும் எங்கிருந்து கசிகின்றது, அதன் மையம் எது என்பது குறித்து நுணுக்கமாக ஆராயப்படவுள்ளது.
இன்று ஆரம்பமாகியுள்ள பணிகள் தொடர்ந்தும் நடைபெறும் என தொழில் சார் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் குறித்த நிபுணர் குழு ஏற்கனவே நீர்மாதிரிகளுடைய பரிசோதனைகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.