Breaking News

அதிரும் தகவல்! தந்தை கொடுத்த தகவலால் காவுகொள்ளப்பட்ட மயூரனின் உயிர்

என் மகன் போதைப் பொருள் கடத்தும் ஆட்களுடன் திரிகிறான். அவனைக் காப்பாற்றி என்னிடம்திருப்பி ஒப்படையுங்கள் என்று மையூரனின் நண்பரான, “அன்று சானின்” தந்தை அவுஸ் திரேலியப்பொலிசாரிடம் கேட்டுக் கொண்டுள்ளார். இதன் காரணமாக அவர்கள் இந்தோனேசிய பொலிசாருக்குஅறிவிக்க, அங்கே வைத்து தான் முதன் முதலில் மயூரன் கைதாகியுள்ளார் என்ற தகவல் தற்போதுவெளியாக ஆரம்பித்துள்ளது.


ஒரு கொலையை இயல்பான மனிதர்கள் யாராலும் செய்ய முடியாது. அது மிக கொடூரமானது. எந்தசெயலாலும் ஒரு கொலையை நியாயப்படுத்தவும் முடியாது. சட்டத்தின் பரிணாம வளர்சியில்மரணதண்டனை தற்போது இல்லாமல் போய் அருகி வருகிறது. பல நாடுகளில் இத்தண்டனையைஇல்லாதொழித்துள்ளார்கள். ஆனால் இந்தோனேசியாவில், எட்டு உயிர்களை குருவி சுடுவதைப் போலசுட்டு வீழ்த்தியிருக்கிறார்கள். தனக்­காக நிர்­ண­யிக்­கப்­பட்ட மரணத் திக­தியை அறிந்­து­கொண்டு,தனக்­காக தயா­ரிக்­கப்­பட்ட சவப்­பெட்­டியை பார்த்­துக்­கொண்டு, தனக்காக செய்யப்பட்டசிலுவையைப் பார்த்துக்கொண்டு, தான் கொலை செய்­யப்­படும் முறையை அறிந்­து­கொண்டு பலவருடங்களாக கொடூர வாழ்வை வாழ்ந்துள்ளார் மையூரன்.

அன்றைய காலகட்டத்தில், இந்­தோ­னே­சி­யா­வுக்கும் அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கும் இடையில்போதைப்­பொருள் வர்த்­த­கத்தில் ஈடு­படும் குழுவை இரு­ நா­டு­களும் மிகத் தீவி­ர­மாக தேடி வந்­தன.மிகவும் சூட்­சு­ம­மாக நடத்­தப்­பட்ட கடத்­தலை கண்­டு­பி­டிப்­பதில் இரு­நா­டு­களும் பாரிய சவாலைஎதிர்­நோக்­கி­யி­ருந்­தன. இந்­நி­லையில் கடந்த 2005 ஆம் ஆண்டு அவுஸ்­தி­ரே­லிய பொலி­ஸா­ருக்கு அன்று சானின் தந்­தையால் ஒரு தகவல் வழங்கப்பட்டது. “எனது மகன் இந்­தோ­னே­சி­யா­வுக்கு பய­ண­மா­கி­யுள்ளான். அவ­னுக்கு போதைப்­பொருள் கடத்­தல்­கா­ரர்­க­ளுடன் தொடர்பு இருப்­ப­தாக அறி­கிறேன். அந்தக் கடத்­தல்­கா­ரர்­க­ளி­ட­மி­ருந்து என் மகனை காப்­பாற்­றித்­தா­ருங்கள்”என்று அந்தத் தந்தை கூறி­யி­ருக்­கிறார்.

அதனை துரும்­பாகக் கொண்டு இரு­நாட்டுப் பொலி­ஸாரும் இணைந்து ,அன்று சானை மறை­மு­க­மாக கண்­கா­ணிக்கத் தொடங்­கினர். அவருடன் தொடர்­பு­டை­ய­வர்­க­ளையும் பின்­தொ­டர்ந்­தனர்.இந்­நே­ரத்தில் இந்­தோ­னே­சி­யாவின் தெற்கில் அமைந்­துள்ள “குட்டா” மாவட்­டத்­திலுள்ள விடு­தியில் தங்­கி­யி­ருந்த மூவர் அந்­நாட்டுப் புல­னாய்வுப் பிரி­வி­னரால் அதி­ர­டி­யாக கைது செய்­யப்­பட்­டனர். அவர்­களில் ஒரு வர்தான் மயூரன் சுகுமாரன். கைது செய்­யப்­பட்­ட­வர்­க­ளி­ட­மி­ருந்து 334கிராம் ஹெரோயின் கைப்­பற்­றப்­பட்­டது. அவர்­க­ளிடம் பொலிஸார் மேற்­கொண்ட தீவிர விசா­ர­ணை­களின் பின்னர் போதைப்­பொருள் கடத்தல் குழு­வுக்குத் தலை­வ­ராக இருந்தார் என்று நம்­பப்­ப­டு­கின்ற அன்று சான் கைது செய்­யப்­பட்டார். போதைப்­பொருள் கடத்­தலில் வலை­பின்னல் போன்றுசெயற்­பட்ட 9 பேர் பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்டு சிறைப்­ப­டுத்­தப்­பட்­டனர்.

இந்­தோ­னே­சி­யா­வி­லி­ருந்து அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கு கடத்­தப்­ப­ட­வி­ருந்த 8.3 கிலோ­கிராம்போதைப்­பொருள் அவர்­க­ளி­ட­மி­ருந்து கைப்பற்றப்பட்டது. இதன் பெறு­மதி 3.1 மில்­லியன்அமெரிக்க டொலராகும்.இவர்கள் நீண்­ட­கா­ல­மாக போதைப்­பொருள் கடத்­தலில் ஈடுபட்டு வந்துள்­ளதாக புல­னாய்வுப் பிரி­வினர் உறு­தி­படத் தெரிவித்­த­போதும் ,இவ்­வி­ட­யத்தில் தனக்கு தொடர்புஎதுவும் இல்லை என மயூரன் சுகு­மாரன் இறு­தி­வரை தெரிவித்து வந்தார். 2006 ஆம் ஆண்டு பெப்­ர­வரி 14 ஆம் திகதி இந்­தோ­னே­சி­யாவின் டென்­பசார் மாவட்ட நீதி­மன்றம் மயூ­ர­னுக்கு மரண தண்­டனை விதித்­தது. இதனை எதிர்த்து மேன்­மு­றை­யீடு செய்­த­போதும் இந்­தோ­னே­சிய உயர் நீதி­மன்றம் 2011 ஆம் ஆண்டு ஜுலை 6 ஆம் திகதி மரண தண்­ட­னையை உறுதி செய்­தது.

பாலி- 9 என்பதே இந்த கடத்தல் குழுவின் பெயராக இருந்துள்ளது. இத­னை­ய­டுத்து ஜனா­தி­ப­திக்குகருணை மனு அளிக்­கப்­பட்டு, பல்­வேறு மனித உரிமை நிறு­வ­னங்கள் மரண தண்­ட­னைக்கு எதி­ராக குரல் கொடுத்­தன. எனினும் அவை எதுவும் சாத்­தி­யப்­ப­ட­வில்லை. மையூரன் நுசா­கம்­பங்­க­னி­லுள்ள சிறையில் அடைக்­கப்­பட்­டி­ருந்தபோது , சிறைக் கைதி­க­ளுக்கு முன்­னு­தா­ர­ண­மாகதிகழ்ந்தார். அடிப்படையில் கராட்டே பயின்று பெரும் பட்டம் பெற்றவர் மையூரன். சிறைச்­சா­லையில்ஏனைய கைதி­க­ளுக்கு ஆங்­கிலம், கணனிக் கல்வி, போட்டோஷொப் வடி­வ­மைப்பு ஆகி­ய­வற்றைபயிற்­று­வித்­த­துடன் சித்­திரம் வரை­தலில் நுட்­பங்­க­ளையும் கற்­றுக்­கொ­டுத்தார். இவ்­வாண்டுபெப்­ர­வரி மாதம் கர்ட்டின் பல்­க­லைக்­க­ழகம் மயூ­ர­னுக்கு “வரை­கலை” பட்­டத்தை வழங்­கி­யது.அனைத்து கைதி­க­ளுக்கும் முன்­னு­தா­ர­ண மாக திகழ்ந்­ததால் சிறைச்­சா­லையில் 20 கைதி­களைவழி­ந­டத்தும் தலை­மைப்­பொ­றுப்பு மயூர­னுக்குக் கிடைத்­தது.

அன்று சான் தன்னை மாற்றிக்கொண்டார். நிறைய மனமாற்றமடைந்து மதபோதகராக விரும்பினார்.அவர் கிறிஸ்தவத்திற்கு மதம் மாறியிருந்தார். கணினியில் அசாதாரண அறிவுடனிருந்தவர்,சிறைச்சாலை கைதிகளிற்கும் அதனை கற்றுக் கொடுத்தார். மயூரன் நிறைய சித்­தி­ரங்­களை வரையவேண்டும் என இறுதியாக ஆசைப்­பட்டார். அதன்­படி தன்­னு­டைய படங்­களை வரைந்து இத­யத்தில்குண்டுத் துளைப்பது போலவும் கவ­லையை வெளிக்­காட்­டு­வது போலவும் பல சித்­தி­ரங்­களைவரைந்தார். மயூ­ரனின் பெற்றோர் சகோ­தரன், அவ­ரது மனைவி, சகோ­தரி மற்றும் உற­வி­னர்கள்சில­ருடன் திறந்த வெளியில் சில மணி­நேரம் கழிப்­ப­தற்கு அவ­காசம் வழங்­கப்­பட்­டது. அதுபோலஅன்று சான் தனது குடும்­பத்­தா­ருடன் தேவா­ல­யத்தில் பொழுதை கழிக்க வேண்டும் என விரும்­பினார்.

இவ்­வி­ரு­வ­ருக்கும் இரு­த­யத்தில் துப்­பாக்கிச் சூடு நடத்தி மரண தண்­டனை வழங்­கப்­படவேண்டும் என்­பதே நீதி­மன்­றத்தின் உத்­த­ர­வாகும். மரண தண்­டனை நடை­முறை இவ்­வா­றுதான்அமைவது வழக்கம். நுசா­கம்­பங்கன் சிறை­யி­லுள்ள மரண தண்­டனை வழங்­கப்­படும் வளா­கத்துக்கு கைதிகள் அழைத்துச் செல்­லப்­ப­டுவர். அவர்கள் நிற்க விரும்­பு­கி­றார்­களா, அல்­லது உட்­கார்ந்­தி­ருக்க விரும்­பு­கி­றார்­களா என விசாரிக்கப்­படும். அதன் பின்னர் வெள்ளை உடை அணி­விக்­கப்­பட்டு கை, கால்கள் கட்­டப்­படும். அவர்கள் தியானம் செய்­வ­தற்­காக சரி­யாக மூன்று நிமி­டங்கள்வழங்­கப்­படும். கைதிகள் சுடப்­ப­டும்­போது கண்கள் மூடி­யி­ருக்க வேண்­டுமா அல்­லது திறந்­தி­ருக்க வேண்­டுமா என்­பதை அவர்­களே முடிவு செய்ய வேண்டும். “என்னைச் சுடும்­போது கண்­களைதிறந்­தி­ருப்­ப­தையே விரும்­பு­கிறேன். நான் தைரி­ய­சா­லி­யாக இவ்வுலகை விட்டுப் பிரி­யவேஆசைப்­ப­டு­கிறேன்” என மயூ­ரனின் நெருங்­கிய நண்­பரும் சித்­திர ஆசி­ரி­ய­ரு­மான பென் குவால்­டி­யிடம் மயூரன் குறிப்­பிட்­டுள்­ள­மையும் இங்கு நினை­வு­ப­டுத்த வேண்டும்.

கைதிகள் ஆயத்­த­மா­ன­வுடன் 10 மீற்றர் தூரத்தில் ஆயுதம் தாங்­கிய பன்­னி­ருவர் ஆயத்­த­மாகஇருப்பர். மரண தண்­ட­னைக்­கான உத்­த­ரவை பிறப்­பிக்க சிறை அதி­கா­ரி­யொ­ரு­வரும் மர­ணத்தை உறு­திப்­ப­டுத்த மருத்­துவர் ஒரு­வரும் அங்கு வருகை தந்­தி­ருப்பர். தண்­டனைநிறைவேற்றப்­பட்­ட­வுடன் சடலங்களை தண்ணீரில் கழுவி , அதனை உற­வி­னர்­க­ளிடம் ஒப்­ப­டைப்பார்கள். இந்த தண்டனையும் இதன்படியே நடந்திருக்கும் என தெரிகிறது. தண்­டனை பெற்றமயூரனுக்கும் அன்ருவுக்கும் சவப்பெட்டிகள் ஏற்கனவே தயார் செய்யப்பட்டுவிட்டன. அதில் இருவரின்பெயர்களும் குறிப்பிடப்பட்டு 29.04.15 என திகதியிடப்பட்டு ஆத்மா சாந்தியடைவதாக எனஎழுதப்பட்டுள்ளது. மயூரனினதும் அன்ருவினதும் உறவினர்கள் சிறைச்சாலைக்கு முன்னால் கதறிஅழுதனர். அவர் வரைந்த ஓவியங்களை சுமந்த வண்ணம் தாய்,தந்தை, சகோதரர்கள் அழுத விதம்நெஞ்சை உருக்கியது. சிறைச்சாலைக்கு வெளியே பதாகைகளை ஏந்தியவண்ணமும்மெழுகுவர்த்திகளை ஏந்தியவண்ணமும் பலர் திரண்டிருந்தனர்.

எனினும் இவை எவையும் இந்தோனேசிய சட்டங்களை வளைக்க போதுமானவையாகஇருக்கவில்லை. மரணம் அனைவருக்கும் பொதுவானது. எனினும் அது தண்டனையாககிடைக்கப்பெறும்போது ஏற்படும் மன அழுத்தமும் விரக்தியும் கொடுமையானதாகும். அவர்கள்பொதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டார்கள் தான். அவர்களின் செயலால் பலர்பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்பதும் உண்மைதான். ஆனால், இதில் குற்றம்சாட்டப்பட்ட மயூரன் மற்றும்அன்று ஆகியோர் புனர்வாழ்விற்குட்படுத்தப்பட்ட நிலையில் உள்ளதாக ,சிறையதிகாரியே சான்றிதழ்வழங்கியிருந்தார். உண்மையில் அவர்கள் முன்னுதாரணம்மிக்கவர்களாக மாறியிருந்தார்கள். இந்ததண்டனையின் மூலம், அவர்களின் திருந்திவாழும் உரிமை பறிக்கப்பட்டுள்ளது. அது தான் நடந்துமுடிந்துள்ளது.

“போய் வா மயூரா” உன் ஓவியங்கள் நிச்சயம் காவியங்களாக ஒரு நாள் மாறும்!