எனது பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது - மஹிந்த கவலை
தற்போதைய அரசாங்கத்தால் தனது பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு அதிகாரிகள் பயணிக்கத் தேவையான அளவு வாகனங்கள் வழங்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். நேற்று இரவு திவுலபிடிய - அலுநெபொல பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே முன்னாள் ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.