Breaking News

கோத்தபாய புலனாய்வுப் பிரிவிற்கு அழைக்கப்படவுள்ளார்!

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச புலனாய்வு பிரிவிற்கு அழைக்கப்படவுள்ளார்.

அவன்கார்ட் மிதக்கும் ஆயுதக் கப்பல் களஞ்சியம் தொடர்பில் விசாரணை நடத்தும் நோக்கில் இவ்வாறு கோதபாய விரைவில் புலனாய்வு பிரிவிற்கு அழைக்கப்படவுள்ளார். தனியார் பாதுகாப்பு நிறுவனமொன்றுக்கு இராணுவத்தினரின் ஆயுதங்களை வழங்கியதாக கோத்தபாய மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் முன்னதாக கோத்தபாயவின் வீட்டுக்கு சென்று புலனாய்வு பிரிவினர் விசாரணை நடத்தியிருந்தனர். அவன்கார்ட் மிதக்கும் ஆயுதக் கப்பல் களஞ்சியம் தொடர்பில் ஏற்கனவே மூன்று கடற்படைத் தளபதிகளிடம் விசாரணை நடத்தி வாக்கு மூலங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.