மைத்திரிக்கும் மகரத்தின் நோய் பரவுமா?
மைத்திரிக்கும் மகர இராட்சசனின் நோய் பரவுமா? இந்த கேள்வியை ஹொலிவுட் திரைப்பட தீவிர ரசிகர் ஒருவர் தன் நண்பரிடம் கேட்டுள்ளார்.
என்ன மகர இராட்சசனின் நோயா? அந்த நண்பர் மீண்டும் அவரிடம் கேட்டார்.
‘ஏன் ஹொபிட் திரைப்படத்தில் வரும் மகரத்தின் நோய்…’ என்று அந்த தீவிர திரைப்பட ரசிகர் கூறினார்.
த ஹொபிட் என்பது ஹொலிவுட்டின் பிரபலமான திரைப்பட தொடராகும். அந்த தொடரின் மூன்றாம் பாகம் அண்மையில் தான் திரையிடப்பட்டது. இந்த திரைப்படத்தின் கதை என்னவென்றால் தொரின் என்ற ராஜ பரம்பரையின் மலையக ராஜதானி விட்டுப் போவதும் அதை மீண்டும் கைப்பற்ற தொரின் இராஜகுமாரன் செல்லும் பயணம் பற்றி சொல்லப்படுகின்றது.
தொரின் தனது தந்தையாரின் மலையக இராஜதானி என்றழைக்கப்படும் அந்த முக்கியத்துவம் வாய்ந்த இராஜதானி இராட்சசகுல உதவியினை பெறும் ஒரு மகரத்தினால் கைப்பற்றப்படுகின்றது. இந்த மகரத்திற்கு இந்த இராஜதானியை சுற்றி காணப்படும் பெரும் மற்றும் சிறிய இராஜதானிகளின் மன்னர்கள், தலைவர்கள் மரண பயத்தில் இருந்தனர். இந்த மகரத்துடன் தாங்கள் போராடினால் தாங்கள் அழிந்துவிடுவோம் என்ற பயத்தில் அமைதியாக வாழ்ந்து வந்தனர். இந்த பயத்தை இல்லாதொழித்து மகர இராச்சியத்திற்கு மீண்டும் கைப்பற்றும் சவாலான கடின பயணத்தை மேற் கொள்ள தொரின் இளவரசன் முடிவெடுக்கின்றான்.
அவன் அதற்காக தன் தந்தையின் இராஜ்ஜியத்துடன் முரண்பட்ட பெரிய, சிறிய இராஜதானிகளை ஒருங்கிணைக்கின்றான். மகரத்திற்கு எதிரான ஒரு அணியை அமைப்பதற்காக அவன் பெரு முயற்சியெடுக்கின்றான். இறுதியில் மலையக இராஜதானியை விட்டு மகரத்தை வெளியேற்றி யுத்தத்தில் வெற்றி கொள்கின்றான். ஆனால் அவனது இராணுவத்தினால் மகரத்தை கொல்ல முடியாமல் போய் விடுகின்றது. மகரம் அருகில் இருக்கும் கிராமத்திற்கு சென்று அக்கிரமத்தை அழித்துக் கொண்டிருக்கையில் அக்கிராமத்து இளைஞன் ஒருவன் அந்த மகரத்தை கொன்று விடுகின்றான். இதை கண்ணுற்ற தொரின் மற்றும் அவனது இராஜ்சியத்தினர் பெரும் மகிழ்சியடைகின்றனர்.
அந்த சந்தர்ப்பத்தில் மகரம் ஒழிந்திருந்த தங்க காசுக்கள், மாணிக்கம் நிறைந்த சுரங்கம்; ஒன்றை காண்கின்றார்கள். தொரின் இளவரசன் அதன் மேல் அதிவிருப்பம் கொள்கின்றான். தொரினுக்கு மகரத்தை அழிக்க உதவிய மந்திரவாதி இதில் மகரத்தின் ஆத்மா இருப்பதாகவும் அந்த ஆத்மாவினால் பேராசை எனும் மகரத்தின் நோய் பரவலாம் எனவும் எச்சரிக்கின்றான். தொரின் அதனை நம்பாது அந்த தங்க சுரங்கத்தை முழுமையாக கைப்பற்ற தீர்மானிக்கின்றான்.
இந்த சந்தர்ப்பத்தில் மகரத்தை அழிப்பதற்காக வந்த மற்றைய இராஜதானிகளின் அரசர்களும் மகரத்தை கொன்ற அந்த கிராமத்தின் தலைவனும் இந்த புதையலை எங்களுக்குள் பகிர்ந்துக் கொண்டு எங்களுடன் சேர்ந்து சமாதானத்துடன் வாழுங்கள் என்ற கருத்தை முன் வைக்கின்றனர். மகரத்தின் பேராசை எனும் நோயால் பாதிக்கப்பட்ட தொரின் தங்கச் சுரங்கத்தை பகிர்ந்துக் கொள்ளவதை புறக்கணிக்கின்றான்.
இந்த சுரங்கம் எனக்குத்தான் சொந்தம் என்று தொரின் தன் படையினருக்கு தனக்கு உதவி புரிந்தவர்களுடன் யுத்தம் புரியும் படி கட்டளையிடுகின்றான். ஆனால் படையினர் தங்களுக்கு உதவி புரிந்தவர்களுடன் எப்படி யுத்தம் புரியமுடியும் என்று கேட்கின்றனர். ஆனாலும் பேராசை எனும் மகர நோயினால் பாதிக்கப்பட்ட இராஜகுமாரன் தங்கள் நட்பு இராஜதானிகளுடன் யுத்தம் புரியும்படி தன் படையினருக்கு கட்டளையிடுகின்றான்.
இந்த சந்தர்ப்பத்தில் மகர இராட்சசனிற்கு பாதுகாப்பு வழங்கி வந்த இராட்சச குலத்தினர் தங்கள் தலைவனை அழிக்கவந்த இராணுவத்தினர் தங்களுக்குள் யுத்தம் செய்வதைக் கண்டு மகிழ்ச்சியுற்று தொரினை அழிக்க வருகின்றனர். தனக்கு மகரத்தின் நோய் பிடித்துள்ளதென்றும் மகரத்தின் ஆத்மா தன்னை அழித்துவிட்டதென்றும் உணர்கின்றான். அவன் அதை உணரும் போது எல்லாம் முடிந்து விட்டது.
தொரின் மற்றும் மைத்திரிக்கு இடையே சில தொடர்புகள் உண்டு. மகரம் மற்றும் நிறைவேற்று அதிகார முறைமை ஒன்றுக்கு ஒன்று சமமானவை. தொரின் போல் மைத்திரியும் இன்றும் எங்கள் நாட்டையழிக்கும் மகர இராட்சசன் போன்ற நிறைவேற்று அதிகாரத்தை அழிக்க தன்னுடன் எதிர்க்கட்சியையும் இணைத்துக் கொண்டார். அவர் அவ்வாறு எதிர்க்கட்சியினரை இணைத்துக் கொண்ட போது எதிர்கட்சிகளும் இந்த நிறைவேற்று அதிகாரத்தின் மூலம் ஒரு பெரும் அரசாங்கத்தை கட்டியெழுப்பி ஆட்சி புரிந்து மகிந்த ராஜபக்சவிற்கு கீழிலிருந்து ஒருவரோடு ஒருவர் மோதிக் கொண்டு தான் இருந்தனர்.
மைத்திரியும் இவ்வாறு அனைத்து எதிர்க்கட்சிகளையும் இணைத்து கொண்டு நிறைவேற்று அதிகாரத்தின் கீழ் பெரும் பலத்துடன் ஆட்சி புரிந்து வந்த மகிந்தவை எதிர்க்க துணிந்த சந்தர்ப்பத்தில் சிலவேளை தோல்வி அடைந்தால் தமக்கு ஏற்படும் நிலை குறித்து ஒருவரோடு ஒருவர் பயத்தில் இருந்தனர். ஆனாலும் அனைவரும் இணைந்து இறுதியில் மகரத்தை தோற்கடித்தனர். மகரத்தை அழித்த அனைவரும் அனைவரும் இப்பொழுது நிறைவேற்று அதிகாரத்தை அழித்து பாராளுமன்றம் என்ற வகையில் தமக்கு பலம் அதிகாரிக்கும் வகையில் சட்டமூலத் திருத்தத்தை கொண்ட வந்துள்ளனர். தொரின் போலல்மால் மைத்திரி அதற்கு தன் ஆதரவை தெரிவித்துள்ளார்.
ஆனால் நிறைவேற்று அதிகாரம் என்ற தங்கச்சுரங்கத்தின் பெறுமதி தெரிந்த சிலர் மகரத்தின் நோயால் பாதிக்கப்பட்டு நிறைவேற்று அதிகாரத்தை முழுமையாக அழிக்க வேண்டாம் என மைத்திரிக்கு ஆலோசனை வழங்கி வருகின்றனர். அவர்கள் மைத்திரிக்கும் மகர நோயை பரப்ப முயற்சிக்கின்றார்கள்.
மைத்திரி இந்த சந்தர்ப்பத்தில் தொரின் போல் தங்கச்சுரங்கத்துள் இருந்து கொண்டு அதன் பயனை அனுபவித்துக் கொண்டு வாழவில்லை. அவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பலம் வாய்ந்தவர்களுடனும், மகிந்தவை அழித்த நட்பு சக்திகளான சோபித தேரர், சந்திரிகா, ரணில், ஜே.வி.பி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ் போன்ற நட்பு சக்திகள் புடைசூழ ஆட்சி புரிந்து வருகின்றார்.
மைத்திரிக்கும் மகரத்தின் நோய் பரவுமா? அல்லது பரப்படுமா? என்பதே அந்த திரைப்பட ரசிகனின் கேள்வி. இது பற்றி தற்போது சொல்ல முடியாது.
ஆனாலும் பிறேமதாசவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வந்து ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து வெளியேறிய லலித் அத்துலத் முதலி நிறைவேற்று அதிகாரத்தை இல்லாதொழிக்கும் போராட்டத்தை தன் கையில் எடுத்து அதற்காக ஆசீர்வாதம் பெறுவதற்காக மல்வத்து தேரர்களை சந்திக்கச் சென்ற போது நல்ல கதையொன்றை சொல்லியிருக்கின்றார்.
‘நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஆசனத்தில் நானும் ஒரு நாள் அமர்வேன் என்றால் எனக்கும் இதை அழிக்க மனம் வராது. எங்கள் கௌரவத்திற்கு உரிய தேரரே, நான் கதிரையில் அமரும் முன்னர் வேலையை முடிக்க வேண்டும்…’ என்றார். இந்தக் கதையை மைத்திரி அறிந்திருக்கின்றாரோ தெரியாது.
மவ்பிம பத்திரிகைக்காக – உபுல் ஜோசப் பிரனாந்து
தமிழில் ஜீவிதன்