பஞ்சாப்பில் ஓடும் பஸ்சில் பாலியல் தொல்லை மகளுடன் குதித்த பெண் ;மகள் பலி (காணொளி இணைப்பு)
பஞ்சாப் மாநிலம் மோக மாவட்டத்தில் விவசாயி ஒருவரின் மனைவியான 35 வயது மதிக்க தக்க பெண் ஒருவர் தனது 14 வயது மகன் மற்றும் 13 வயது மகளுடன் பக்கத்தில் உள்ள கிராமத்தை சேர்ந்த உறவினர் வீட்டுக்கு பஸ்சில் பயணம் சென்று கொண்டு இருந்தார்.
டோல் பிளாசா என்ற இடம் தாண்டி மோகா நகர் அருகே பஸ் சென்று கொண்டு இருக்கும் போது பஸ்சில் இருந்த 2 கண்டக்டர்களில் ஒருவர் பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்டார்.பஸ்சில் குறைவான பயணிகளே இருந்து உள்ளனர்.
பஸ்சை நிறுத்துமாறு சாரதியிடம் அந்த பெண் முறையிட்டு உள்ளார். ஆனால் சாரதி கண்டு கொள்ள வில்லை. பஸ்சில் இருந்த பயணிகளோ, பஸ் சாரதி மற்றும் மற்றொரு கண்டக்டரோ இதை கண்டு கொள்ள வில்லை. நீண்ட நேரம் இந்த தொல்லை தொடர்ந்து கொண்டு இருந்தது.பல முறை எதிர்ப்பு தெரிவித்தும் கண்டக்டர் கேட்பதாக இல்லை.
இதனால் பொறுமை இழந்த அந்த பெண் தனது மகளுடன் ஓடும் பஸ்சில் இருந்து வெளியே குதித்து விட்டார். மகன் மட்டும் பஸ்சில் இருந்தார்.மற்றொரு தகவலில் தாயும் மகளும் வெளியே தள்ளப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
கண்டக்டரின் இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்க பஸ்சில் இருந்த யாரும் உதவிக்கு வரவில்லை . முதலில் மகளை பஸ்சில் இருந்து வெளியே தள்ளிய பெண் பின்னர் தானும் பஸ்சில் இருந்து குதித்ததாக கூறப்படுகிறது.மற்றொரு தகவலில் தாய்-மகளையும் பஸ்சில் வைத்து 6 பேர் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இதில் காயம் அடைந்த தாய்-மகள் இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர் இதில் அதிக காயங்கள் காரணமாக மகள் இறந்தார். தாயாருக்கு சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது. இந்த சம்பவம் நடைபெற்ற பஸ் பஞ்சாப் முதல்வர் சுக்பிர் பாதலுக்கு சொந்தமான நிறுவனத்தை சேர்ந்தது என்றும் மற்றோரு நிறுவனத்திற்கு அது லீசுக்கு கொடுக்கபட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. பஸ்சின் டிரைவரும் கண்டக்டரும் தலைமறைவாகி விட்டனர்.