மஹிந்தவின் கருத்து பிழையானது! பொதுபல சேனா
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தோல்விக்கு தமது இயக்கமே பொறுப்பு கூறவேண்டும் என முன்னாள் ஜனாதிபதி கொண்டுள்ள நிலைப்பாட்டு பிழையானது என பொதுபல சேனா அமைப்பு தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய கலகொட அத்தே ஞானசார தேரர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
மகிந்த ராஜபக்ஸவின் தோல்விக்கு எமது இயக்கம் ஒப்பந்த அடிப்படையில் செயற்பட்டது என்று கூறப்படும் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர் தோற்பார் என்று தெரிந்தும் அவர் போட்டியிட்டது அவரின் தவறு என கலகொட அத்தே ஞானசார தேரர குறிப்பிட்டார்.