மலேசியாவில் புலிகள்? கைது செய்ய அஞ்சும் மைத்திரி அரசு
பல போதைப்பொருள் வர்த்தகர்கள் மலேசியாவில் மறைந்து வாழ்வதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பாதுகாப்பு படையினரால் தேடப்பட்டு வரும் தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட தலைவர்கள், போதைப்பொருள் வர்த்தகர்கள் உள்ளிட்ட 40 பேர் மலேசியாவில் பதுங்கி வாழ்கின்றனர். எனினும் இவர்களை கைது செய்ய மலேசியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் நியமிக்கப்படவில்லை.
முன்னர் கடமையில் இருந்த இராணுவப் புலனாய்வு அதிகாரி 12 தமிழீழ விடுதலைப் புலிச் செயற்பாட்டாளர்களை அந்நாட்டு பொலிஸாரின் ஒத்துழைப்புடன் கைது செய்து நாடு கடத்தியிருந்தார். இந்த அதிகாரியின் சேவைக்காலம் அண்மையில் நிறைவடைந்திருந்தது.
மலேசிய உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள் புலிச் செயற்பாட்டாளர்கள், போதைப்பொருள் வர்த்தகர்களை கைது செய்வதில் நாட்டம் காட்டுவதில்லை. புலிச் செயற்பாட்டாளர் ஒருவர் தனது கடவுச்சீட்டை புதுப்பிக்க வழங்கியிருந்தார் எனவும் அது குறித்து கூட உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள் கவனம் செலுத்தவில்லை எனவும் திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.