இரண்டாவது நாளாகவும் தொடரும் வேலையற்ற பட்டதாரிகளின் ஆர்ப்பாட்டம்
யாழ்.மாவட்ட செயலகத்திற்கு முன்னால் அரச வேலைவாய்ப்பினை வழங்கக் கோரி வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளால் நேற்று ஆரம்பிக்கப்பட்ட கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இரண்டாவது நாளாக இன்றும் தொடர்கிறது.
வடமாகாணத்தில் உள்ள வேலையற்ற பட்டதாரிகள் சமூகம் அரச வேலையை வழங்க வேண்டும் என்றும் தமக்கு குறித்த பிரச்சினைக்குரிய தீர்வை எழுத்துருவில் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இன்றும் இரண்டாவது நாளாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.