மைதானத்தில் சுவாரஸ்யமாக நடந்து கொண்ட விராத் கோஹ்லி
நேற்றைய தினம் இடம்பெற்ற ரோயல் சலஞ்சர்ஸ் பங்களூர் அணி மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற போட்டியில் சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று இடம்பெற்று.
ரோயல் சலஞ்சர்ஸ் பங்களூர் அணியினரின் துடுப்பாட்டத்தில் 17 வயது நிரம்பிய சப்ராஸ் 21 பந்தில் 45 ஓட்டங்களை விளாசினார். இறுதியாக தமது 20 ஓவர்கள் நிறைவடைந்த பின்னர் சப்ராஸ் மைதானத்தில் இருந்து திரும்பி வரும் போது விராத் கோஹ்லி அவரை வணங்கிய வண்ணம் வரவேற்றார். இது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.
20ஓவர்கள் நிறைவில் பங்களூர் அணி 7 விக்கெட்டுக்களை இழந்து 200 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. எனினும் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.