எனக்கு அரசியல் கற்பிக்க வேண்டாம்! சந்திரிகா எச்சரிக்கை
தனக்கு அரசியல் கற்பிக்க முயற்சிக்க வேண்டாம் என முன்னாள் பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்கவின் மகன் பாராளுமன்ற உறுப்பினர் விதுர விக்ரமநாயக்கவுக்கு எச்சரித்துள்ளார் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாநாயக்க குமாரதுங்க.
தனது தந்தையின் 55 வருட அரசியல் வாழ்வைக் கொண்டாடும் முகமாக விதுர விக்கிரமநாயக்கவினால் நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் ஜனாதிபதி மைத்திரி, சந்திரிகா, மஹிந்த ராஜபக்ச ஆகிய மூவருக்கும் அழைப்பு விடுத்துள்ளதுடன், சந்திரிகா மற்றும் மகிந்த ஆகிய இருவரும் அருகருகாக அமர்ந்திருக்கும் விதமான ஏற்பாட்டை செய்ய விதுர முயன்றிருக்கிறார்.
இது முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவை சீற்றமடைய வைத்துள்ளது. விதுர விக்கிரமநாயக்கவை தொலைபேசியில் பிடித்து, ஆளை ஒரு பிடித்துள்ளார் சந்திரிகா, எனக்கு அரசியல் கற்றுத்தர முயற்சிக்க வேண்டாம் என கடுமையாக பேசி தொலைபேசியை வைத்துள்ளார். பின்னர், அவரது தந்தை ரத்னசிறி விக்ரமநாயக்கவையும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இது பற்றி ஆட்சேபித்துள்ளார்.