கேன்ஸ் திரைப்பட விழாவில் இலங்கை மாணவியின் ஆவணப்படம்
பிரான்ஸில் முதுமானி பட்டப்படிப்பைத் தொடர்ந்து வரும் 32 வயதான சார்மினி கங்கானம்கே என்ற மாணவியின் ஆவணப்படமே இவ்வாறு காட்சிப்படுத்தப்பட உள்ளது. போர் இடம்பெற்ற நாட்டிலிருந்து வெளியேறிய தாய் ஒருவரின் கருவில் இருக்கும் குழந்தைக்கான செய்தியாக இந்த ஆவணப்படத்தின் கதை அமைந்துள்ளது.
முதுமானி பட்டத்திற்கான ஆய்வாக செய்யப்பட்ட இந்த ஆவணப்படம், வெறுமனே நூலகத்தில் இருப்பதனை விரும்பவில்லை எனவும் மக்களுக்கு ஏதேனும் செய்தியை சொல்ல வேண்டுமெனவும் மாணவி தெரிவித்துள்ளார்.
கணவரின் கமரா, ஸ்மார்ட் போன் போன்ற கருவிகளை பயன்படுத்தி மிகவும் செலவு குறைந்த அடிப்படையில் ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. போரின் நேரடி வலிகள் இல்லாத போதிலும் போரினால் ஏற்பட்ட அனுபவங்கள் கசப்பானது என கங்கானம்கே தெரிவித்துள்ளார்.