சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழுவிற்கு புதிதாக ஐந்து உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்
சிறிலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழுவிற்கு புதிதாக ஐந்து உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மைத்தரிபால சிறிசேனவுக்கு ஆதரவான அர்ஜுன ரணதுங்க, சோலாங்காராச்சி, ஹிருனிகா பிரேமசந்திர, நந்தமித்திர ஏக்கநாயக்க மற்றும் எதிரிவீர வீரவர்தன ஆகியோரே புதிதாக இணைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த சனிக்கிழமை முன்னாள் அமைச்சர்களான பந்துளகுணவர்தன, ரோஹித்த அபேகுணவர்தன, எஸ்.எம்.சந்திரசேன, ரீ.பி.ஏக்கநாயக்க மற்றும் சாலிந்த திஸாநாயக்க ஆகியோ மத்திய செயற்குழுவில் இருந்து நீக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.