ஷிராணிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
முன்னாள் பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான வழக்கு ஜூலை மாதம் 21ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சொத்துக்கள் விவரங்களை வெளியிடாமைக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு, கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்ட முன்னிலையில் இன்று செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது.
இந்த வழக்கை தொடர்ந்து முன்கொண்டு செல்லமுடியுமா என்பது தொடர்பில் பிரதிவாதி தரப்பினால் முன்வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் கடிதம் தங்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை என்று இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு, நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்தது. இதனையடுத்தே, மேற்படி வழக்கை ஜூலை மாதம் 21ஆம் திகதிக்கு பிரதான நீதவான் ஒத்திவைத்தார்.