Breaking News

தெற்காசியா வேகமான வளர்ச்சி! இலங்கை வேகமான வீழ்ச்சி- எச்சரிக்கும் உலக வங்கி

தெற்காசியா பொருளாதார ரீதியாக வேகமாக வளர்ச்சி கண்டு வருகின்ற போதிலும், சிறிலங்காவின் பொருளாதார வளர்ச்சி இந்த ஆண்டு, 6.9 வீதமாக குறைவடையும் என்று உலக வங்கி அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது. 

இதற்கு கட்டுமானச் செயற்பாடகள் மந்தகதியை அடைந்துள்ளதை, உலக வங்கி முக்கிய காரணமாக குறிப்பிட்டுள்ளது.அரச பணியாளர்களின் சம்பள அதிகரிப்பினால், உயர்நுகர்வு மட்டம் அதிகரித்து, ஓரளவுக்கு யக்கம் செலுத்தும் என்றும் உலக வங்கி தெரிவித்துள்ளது.

முதலீடு தொடர்பான பொருளாதாரக் கொள்கை புதிய அரசாங்கத்தினால் மீளாய்வு செய்யப்படுவதும், பொருளாதார வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. பொதுவாக தெற்காசியாவின் பொருளாதார வளர்ச்சி 7 வீதமாக இருக்கும் என்றும், இந்தியா அதிவேகமான பொருளாதார வளர்ச்சியை (7.5 வீதம்) கொண்டிருக்கும் என்றும் உலக வங்கி எதிர்வு கூறியுள்ளது.

அதேவேளை, கடந்த ஆண்டில் 7.4 வீதமாக இருந்த சிறிலங்காவின் பொருளாதார வளர்ச்சி வீதம், இந்த ஆண்டு 6.9 வீதமாக குறையும் என்றும் கூறப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டில் இது 6.6 வீதமாக மேலும் வீழ்ச்சி காணும் என்றும் உலக வங்கி எச்சரித்துள்ளது.