வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம்
வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த வேலையற்ற பட்டதாரிகள் ,தமக்கு அரச நியமனம் வழங்கக்கோரி யாழ்.மாவட்டச் செயலகத்தின் முன்பாக இன்று காலை கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இதன்போது அவர்கள் அரச செயலகத்துக்கான இரு நுழைவாயில்களையும் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் செயலகத்துக்கு வந்த பொதுமக்கள் தமது சேவைகளைப் பெறுவதில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர் என்று தெரியவருகிறது.