Breaking News

சென்னையில் ஆந்திரா பேருந்துகள் அடித்து நொறுக்கப்பட்டது! (படங்கள் இணைப்பு)



ஆந்திரா வனப்பகுதியில் ஆந்திரா காவல்துறையால் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து தமிழர் முன்னேற்றக் கழகத்தினர் சென்னை கோயம்பேடு பேருந்து நிறுத்தத்தில் ஆந்திரா பேருந்துகளை அடித்து நொறுக்கினர். இதில் 8 பேருந்துகள் சேதம் அடைந்தன.

இந்த தாக்குதலில் ஈடுபட்ட தமுக பொதுச் செயலாளர் அதியமான் மற்றும் அக்கட்சியை சேர்ந்த பாலன் என்ற நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீது பொது சொத்தை சேதப்படுத்தியதற்கான குற்றப் பிரிவின் கீழ் குற்றப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்று 08/04/15 காலை புழல் சிறையில் இருவரும் அடைக்கப்பட்டனர்.

இந்த நிகழ்வை தொடர்ந்து ஆந்திரா செல்லவிருந்த பேருந்துகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது ஆந்திரா போக்குவரத்து துறை. தமிழர்கள் மீது இனியும் ஆந்திர அரசு தாக்குதல் நடத்தக் கூடாது என்பதை எச்சரிக்கும் விதமாகவும், பலியான தமிழர்களுக்கு ஆந்திரா அரசு தலா 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், தமிழக அரசு உடனே இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக தமிழர் முன்னேற்றக் கழகம் தெரிவித்துள்ளது.

கொலை செய்யப்பட்ட தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் தமிழர் முன்னேற்றக் கழகம் தொடர்ந்து போராடும் என தெரிவித்துள்ளார் தமுக தலைவர் திரு. அதியமான்