Breaking News

பேருந்து - பிக்கப் விபத்து! இருவர் உயிரிழப்பு

இலங்கை போக்குவரத்துச் சபையின் பேருந்தும் இலங்கை மின்சார சபையின் பிக்கப் வாகனமும் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.மேலும் இருவர் படுகாயமடைந்தனர். 

 மேற்படி இந்த விபத்து நேற்றிரவு 7.30 மணியளவில் மாங்குளம் - முல்லைத்தீவு வீதியில் தச்சடம்பனில் இடம்பெற்றுள்ளது. இதில் இலங்கை மின்சார சபையின் ஒப்பந்த பணியாளர்களான மட்டுவில் தெற்கைச் சேர்ந்த நவரட்ணம் ஜீவராஜ் (வயது 26)இ கைதடி நுணாவிலைச் சேர்ந்த துரைராஜசிங்கம் தயாபாலன் ஆகியோரே உயிரிழந்தவராவார். 

 மேலும் சம்பவம் தொடர்பில் தெரிய வருவது, வேகமாக சென்ற பிக்கப் குறுக்கே வந்த மாடு ஒன்றுடன் மோதுண்டு கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த இ.போ.ச. பேருந்துடன் மோதியதாகத் தெரியவருகின்றது. மேலும் குறித்த சம்பவத்தில் படுகாயமடைந்த இருவரும் கிளிநொச்சி பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

 இதேவேளை உயிரிழந்தவர்களின் சடலங்களும் பிரேத பரிசோதனைகளுக்காக கிளிநொச்சி பொது மருத்துவனையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த விபத்துக் குறித்து மாங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.