முன்னாள் போராளியை காணவில்லை! மனைவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
முன்னாள் போராளியான ஆசிரியரை காணவில்லை என சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் அவரது மனைவி முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
வடக்கு ஏழாலை பகுதியைச் சேர்ந்த மகாதேவன் மணிவண்னண் என்பவரையே இவ்வாறு காணவில்லை என சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் அவரது மனைவி தெரிவித்துள்ளார்.
குறித்த நபர் யாழ். இந்துக்கல்லூரியில் ஆசிரியராக கடமையாற்றி வருகின்றார் என்றும் நேற்று வெள்ளிக்கிழமை (17) வீட்டில் இருந்து வெளியே சென்றவர் இதுவரையில் வீடு திரும்பவில்லை என்றும் இன்று (18) சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். அந்த முறைப்பாட்டின் பிரகாரம் சுன்னாகம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.