மஹிந்த - மைத்திரி சந்திப்பு இடம்பெறாமைக்கு மஹிந்தவே காரணம்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் மஹிந்த ராஜபக்ஷவுக்கு இடையிலான சந்திப்பு இடம்பெறாமைக்கு காரணம் குறித்த தினத்தில், மஹிந்த ராஜபக்ஷவால் கலந்து கொள்ள முடியாமல் போனமையே என, பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி அடுத்த மாதம் இருவருக்கும் இடையிலான சந்திப்பை மேற்கொள்ள தினமொன்றை வழங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணக்கம் தெரிவித்துள்ளதாக, அவர் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே குமார வெல்கம இவ்வாறு கூறியுள்ளார்.
இதேவேளை, நிதி மோசடி விசாரணைப் பிரிவிலுள்ள புதிய பொலிஸ் பிரிவு தொடர்பில் ஆராய்ந்து, அது தகுதியற்றதாயின் நீக்க நடவடிக்கை எடுக்க ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
மேலும் நிதி மோசடி தொடர்பில் குற்றம்சாட்டப்பட்ட மத்திய வங்கி ஆளுனரை நீக்குமாறு நேற்று சபாநாயகரிடம் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.