Breaking News

ஐபிஎல் இல் புதிய அவதாரம் எடுத்தார் பொலார்ட்

பொலார்ட் பந்து வீசும் போது துடுப்பாட்ட வீரர்களுடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபடுவது தொடர்பில் நடுவர்களால் எச்சரிக்கப்பட்டதைத் தொடர்ந்து நேற்றைய தினம் களத்தடுப்பில் புதிய விதமாக காணப்பட்டார்.

வாயில் பிளாஸ்டர் அணிந்த வண்ணம் களத்தடுப்பில் ஈடுபட்டார். பின்னராக டிவில்லியர்ஸ் அடித்த பந்தை பிடியெடுத்த போது மற்ற வீர்ர்கள் சந்தோஷத்தை வெளிப்படுத்திய போதும் இவர் வாயில் கையை வைத்த படியே காணப்பட்டார்.

எனினும் இவர் போட்டியின் இறுதி ஓவரை வீசிய போது இவரது வாயில் பிளாஸ்டர் காணப்படவில்லை. அத்துடன் நேற்றைய போட்டியில் டிவில்லியர்ஸ் 11 பந்துகளில் 41 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.