கூட்டமைப்பின் பதிவு நடவடிக்கை பிற்போடப்பட்டுள்ளது
தமிழ் தேசிய கூட்டமைப்பை பதிவு செய்யும் நடவடிக்கை பிற்போடப்பட்டுள்ளது. இருந்தும் இணைந்து செயற்படுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை செய்து கொள்ள அதன் அங்கத்துவ கட்சியினர் இணங்கியுள்ளதாக செல்வம் அடைக்கலநாதன் எம். பி. தெரிவித்தார்.
தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராசா, ரீ. சித்தார்த்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோருக்கிடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இந்த இணக்கம் காணப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
வன்னி மாவட்டத்தைச் சேர்ந்த இரு பிரதேச சபையினர் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கொன்று விசாரணையில் இருப்பதாலேயே பதிவு பிற்போடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.