இலங்கையுடன் அமெரிக்கா பேச்சு
மனித உரிமைகள், ஜனநாயகம், வெளிப்படைத் தன்மை மற்றும் பொறுப்புக் கூறல் ஆகிய விடயங்கள் குறித்து, இலங்கையுடன் அமெரிக்கா கலந்துரையாடியுள்ளது.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உதவிச் செயலாளர் ரொம் மாலினோவ்ஸ்கி கடந்த வாரம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.
அவரின் விஜயம் தொடர்பாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. உதவிச் செயலாளர் ரொம் மாலினோவ்ஸ்கி தமது இலங்கை விஜயத்தின் போது அரசியல் பிரதிநிதிகள், மனித உரிமைகள், மத மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளையும் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.