தமிழ்கிங்டொம் இணையத்தள வாசகர்களுக்கு இனிய சித்திரைப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
மன்மத வருட பிறப்பு பிறக்கவுள்ளதை அனைத்து மக்களும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். இந்த நிலையில் வாக்கிய பஞ்சாங்கத்தின் படி பகல் 12.23க்கு கற்கடக லக்கினம் அவிட்ட நட்சத்திரம் 2ஆம் பாதம், திதி அபரபட்ஷ தசமி மஹர ராசியில் பிறக்கிறது.
எப்படியிருப்பினும் திருக்கணித பஞ்சாங்கத்தின் படி புதிய வருடம் 1.47க்கு பிறக்கிறது.புண்ணிய காலம் வாக்கிய பஞ்சாங்கத்தின் படி காலை 8.23யில் இருந்து மாலை 4.23 வரையில் என குறிப்பிடப்பட்டுள்ளது.
திருக்கணித பஞ்சாங்கத்தன் படி, காலை 9.47 முதல் மாலை 5.7 வரை என தெரிவிக்கப்பட்டுள்ளது. புண்ணிய காலப்பகுதியில் மருத்து நீருடன் சிரசில் கடம்ப இலையையும் காலில் வேப்பம் இலையையும் வைத்து நீராட வேண்டும்.