இலங்கை - ஜப்பானுக்கு இடையில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை
இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்ளும் வகையில், இரு நாடுகளுக்கும் இடையில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்படவுள்ளது.
இந்த ஆண்டில் குறித்த சுதந்திர வர்த்தக உடன்படிக்கை கைச்சாத்திடப்பட உள்ளதாக இலங்கை ஜப்பான் வர்த்தக ஒத்துழைப்பு அமைப்பு அறிவித்துள்ளது. இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் நொபிதோ ஹோபோ தலைமையில் அண்மையில் இலங்கை - ஜப்பான் வர்த்தக ஒத்துழைப்பு அமைப்பின் வருடாந்தக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தின் போதே சுதந்திர வர்த்தக உடன்படிக்கை குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.