மஹிந்த லஞ்சம் கொடுக்க முயன்றார்! அம்பலப்படுத்தும் பொன்சேகா
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தனக்கு இலஞ்சம் வழங்குவதற்கு முயற்சித்ததாக பீல்ட் மார்ல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
கம்பொல நகர சபையில் இடம் பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது தகவலுக்கு மேல் தகவல் வந்து கொண்டிருந்தது.
2000 மில்லியன் பணம் தருகிறேன், கொழும்பில் வசிப்பதற்கும் காணி தருகிறேன், ஜெனரல் அதிகாரத்தை மீண்டும் தருகிறேன், பாதுகாப்பு வழங்கு கின்றேன், மனைவிக்கும் வேலை பெற்றுக்கொடுக்கிறேன், பிள்ளைகளுக்கும் அவசியமானதைச் செய்து தருகிறேன் எனத் தகவல் வந்துகொண்டே இருந்தது. ஆனால் அதனை நான் பெற்றுக் கொள்ளவில்லை. நாட்டை பற்றியே சிந்தித் காரணத்தினால் நாங்கள் யாரிடமும் மண்டியிடவில்லை. சிறையில் இருந்தாலும் மண்டியிடவில்லை. ஆனால் இன்று ராஜபக்ச மண்டியிட்டுள்ளார் என்றார்.